/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நல வாரியத்தை செயல்படுத்த கோயில் பூஜாரிகள் கோரிக்கை நல வாரியத்தை செயல்படுத்த கோயில் பூஜாரிகள் கோரிக்கை
நல வாரியத்தை செயல்படுத்த கோயில் பூஜாரிகள் கோரிக்கை
நல வாரியத்தை செயல்படுத்த கோயில் பூஜாரிகள் கோரிக்கை
நல வாரியத்தை செயல்படுத்த கோயில் பூஜாரிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 15, 2024 04:56 AM
ராமநாதபுரம் : 13 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பூஜாரிகள் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கோயில் பூஜாரிகள் நலச்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரத்தில் கோயில் பூஜாரிகள் நலச்சங்க மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தென் மண்டலத்தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார்.
ராமநாதபுரம் ஒன்றிய துணை செயலாளர் தேவராஜன் வரவேற்றார்.
தமிழ்நாடு அரசு ஹிந்து சமய அறநிலையத்துறை பூஜாரிகள் ஓய்வூதிய தேர்வுக்குழு உறுப்பினர் வாசு, மாநில பொருளாளர் சுந்தரம், மாநில செயலாளர் சேகர், மாவட்டத்தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் பஞ்சவர்ணம் பங்கேற்றனர்.
கூட்டத்தில் ஒரு கால பூஜை நடைபெறாத கோயில்களை கண்டறிந்து புதியதாக 1000 கோயில்களுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு, ஒரு கால பூஜை வங்கி வைப்பு நிதியை 2.5 லட்சமாக உயர்த்தியதற்கும், பூஜாரிகள் குடும்பத்தினை சேர்ந்த குழந்தைகள் உயர்கல்வி பயில ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும், ஹிந்து சமய அறநிலையத்துறைக்கும் நன்றி தெரிவித்தனர்.
கோயில் பூஜாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை குறைந்த பட்சமாக ரூ.5000 வழங்க வேண்டும். கிராம கோயில் நல வாரிய உறுப்பினர்களுக்கு மாதம் ரூ.2000 தர வேண்டும்.
மாத ஓய்வூதியம் ரூ.5000 ஆக உயர்த்த வேண்டும்.
13 ஆண்டுகள் செயல்படாமல் உள்ள பூஜாரிகள் நல வாரியத்தை செயல்படுத்த வேண்டும்.
அன்னை தமிழில் அர்ச்சனை நுால்கள் விலையின்றி பூஜாரிகளுக்கு அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.