ADDED : ஜூலை 29, 2024 10:34 PM

திருவாடானை : திருவாடானை அருகே டி.கிளியூர் கிராமத்தில் நீலகாளியம்மன் கோயில் ஆடித்திருவிழா ஜூலை 22ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு திருவிளக்கு பூஜை நடந்தது.
பெண்கள் கோயில் பிராகரத்தில் விளக்கேற்றி அம்மன் தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கோயில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.