/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ புனித தெரசாள் சர்ச் 100வது ஆண்டு விழா புனித தெரசாள் சர்ச் 100வது ஆண்டு விழா
புனித தெரசாள் சர்ச் 100வது ஆண்டு விழா
புனித தெரசாள் சர்ச் 100வது ஆண்டு விழா
புனித தெரசாள் சர்ச் 100வது ஆண்டு விழா
ADDED : செப் 23, 2025 11:47 PM

ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் புனித குழந்தை தெரசாள் சர்ச் 100வது ஆண்டு திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தங்கச்சிமடம் தண்ணீர் ஊற்று அருகே உள்ள பழமையான புனித குழந்தை தெரசாள் சர்ச் 100வது ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று மாலை சர்ச் வளாகத்தில் திருவிழா கொடியை
விழாக் குழுவினர் ஏற்றினர். அக்.,1ல் திருவிழாவையொட்டி சர்ச் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித குழந்தை தெரசாள் எழுந்தருள தேர்பவனி நடக்கும்.
அக்.,2ல் திருவிழா திருப்பலி பூஜை முடிந்ததும் கொடி இறக்கப்படும்.
மேலும் செப்., 24 முதல் 30 வரை சர்ச் வளாகத்தில் தினமும் நற்கருணை, ஆராதனை ஜெபக்கூட்டம் நடக்கும். விழா ஏற்பாடுகளை தண்ணீர் ஊற்று சீதா குண்டம், புதுார், வேர்க்காடு, பேக்கரும்பு கிராம இறைமக்கள் செய்து வரு கின்றனர்.