ADDED : செப் 23, 2025 11:44 PM
ராமநாதபுரம்; ராமநாதபுரம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலு வலகம் முன்பு மறியல் போராட்டம் நடத்திய 105 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ராமநாதபுரம் மின்சார வாரிய அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் காசிநாதன் தலைமை வகித்தார்.அவர் கூறிய தாவது:
மின்சார வாரியத்தில் களப்பணியில் ஈடுபடும் பெரும்பாலான தொழிலாளர்கள் ஒப்பந்த முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பத்து ஆண்டுகளுக்கும் மேல் ஒப்பந்த தொழிலாளராக பணிபுரிந்தவர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். அது போல் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த ஒப்பந்த ஊழியர் களுக்கு தினக்கூலி, போனஸ் வழங்க வேண்டும். தி.மு.க., தனது 2021 தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது போல் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து நுாறுக்கும் மேற்பட்டோர் ராமநாத புரம் மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து கேணிக்கரை போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 105 பேரை கைது செய்தனர். மாலை 5:00 மணிக்கு அனை வரையும் விடுவித்தனர். போராட்டத்தில் சங்க செயலாளர் முருகன், பொருளாளர் ஆரோக்கியம், துணைச் செயலாளர்கள் பாலகிருஷ்ணன், ராகுல், சி.ஐ.டி.யு., மாவட்ட தலைவர் சிவாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.