/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர் இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்
இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்
இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்
இலங்கையில் விடுதலையான தமிழக மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்
ADDED : அக் 04, 2025 02:38 AM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் விடுதலையான ராமநாதபுரம், ராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேர் வீடு திரும்பினர்.
ஜூலை, ஆக.,ல் இலங்கை கடற் படை வீரர்களால் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் அருகே திருப்பாலைக்குடி, தொண்டியை சேர்ந்த 4 மீனவர்கள், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த 10 மீனவர்கள் என 14 மீனவர்களை இலங்கை ஊர்க் காவல்துறை நீதிமன்றம் செப்.,ல் விடுவித்தது. இவர்கள் நேற்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்திறங்கினர். மீன்துறை அதிகாரிகள் வேனில் அழைத்து வந்து வீடுகளுக்கு அனுப்பினர்.


