Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ லோக் அதாலத் நடந்ததில் 706 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் நடந்ததில் 706 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் நடந்ததில் 706 வழக்குகளுக்கு தீர்வு

லோக் அதாலத் நடந்ததில் 706 வழக்குகளுக்கு தீர்வு

ADDED : செப் 13, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத் தில் நடந்த லோக் அதாலத் மூலம் 706 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.8.15 கோடி நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத் தில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நேற்று நடந்தது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்ற வளாகம், பரமக்குடி, முதுகுளத்துார், கமுதி, கடலாடி, திருவாடானை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் 10 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதில் நிலுவையில் உள்ள சிவில், கிரிமினல், வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கி வாராக் கடன்கள், சிறு வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி மெஹபூப் அலிகான் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட நீதிபதி மோகன்ராம், விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி கவிதா, குற்றவியல் நீதிபதி ஜெய சுதாகர், சார்பு நீதிபதிகள் மும்தாஜ், பாஸ்கர், நீதித்துறை நடுவர் நிலவேஸ்வரன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கேத்திரினி ஜெபா சகுந்தலா ஆகி யோரின் அமர்வுகளில் வழக்குகள் விசாரிக்கப்பட்டன.

வழக்கறிஞர் சங்கத் தலைவர் அன்பு செழியன், வழக்கறிஞர்கள், வழக்கு தரப்பினர்கள் கலந்து கொண்டனர். 5923 வழக்குகள் பரிசீலினைக்கு எடுக்கப்பட்டு 706 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது. இதில் 8 கோடியே 15 லட்சத்து 67 ஆயிரத்து 346 ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us