ADDED : பிப் 01, 2024 06:46 AM
திருவாடானை : திருவாடானை அருகே ஆட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. இவரது வைக்கோல் படப்பில் நேற்று திடீரென தீப்பிடித்தது.
திருவாடானை தீயணைப்பு துறைக்கு பிரபு தகவல் தெரிவித்தார்.
நிலைய அலுவலர் வீரபாண்டியன் தலைமையிலான வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்திற்கான காரணம் குறித்து திருவாடானை போலீசார் விசாரிக்கின்றனர்.


