/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/விளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயிவிளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயி
விளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயி
விளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயி
விளை நிலத்தில் தேசியக்கொடி ஏற்றிய இயற்கை விவசாயி
ADDED : ஜன 28, 2024 05:00 AM
கமுதி : கமுதி அருகே கோரைபள்ளம் இயற்கை விவசாயி ராமர் குடியரசுத்தின விழாவில் கலெக்டரிடம் விருது பெற்ற சான்றிதழுடன் விவசாய நிலத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்தார்.
கமுதி அருகே கோரைப்பள்ளம் விவசாயி ராமர் இயற்கை முறையில் கடந்த 25 ஆண்டுகளாக விவசாயம் செய்கிறார். இதை பாராட்டி பிரதமர், கவர்னர் சான்றிதழ் வழங்கியுள்ளனர். பல்வேறு விருதுகளும் பெற்றுள்ளார்.
ராமநாதபுரத்தில் நடந்த குடியரசு தின விழாவில் மாவட்ட விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு கண்டு வாழ்வாதாரத்தை உயர்த்திட சமூக பொறுப்புணர்வு செயல்பட்டதற்கான விருதை கலெக்டர் விஷ்ணுசந்திரன் இயற்கை விவசாயி ராமருக்கு வழங்கினார்.
விருது சான்றிதழ் உடன் தனது விளை நிலத்தில் வைத்து தேசியக் கொடி ஏற்றி சக விவசாயிகளுடன் மரியாதை செலுத்தினர்.