சூறாவளியால் சாலையில் மணல் குவியல்
சூறாவளியால் சாலையில் மணல் குவியல்
சூறாவளியால் சாலையில் மணல் குவியல்
ADDED : செப் 30, 2025 08:15 AM

ராமேஸ்வரம்; தனுஷ்கோடியில் வீசிய சூறாவளியால் தேசிய நெடுஞ்சாலையில் மணல் குவிந்து வாகனங்கள் சிக்கின.
சில நாட்களாக ராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதியில் சூறாவளி வீசுகிறது. கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது.
தனுஷ்கோடியில் மணல் புயல் வீசியதால் தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் பல இடங்களில் ஒரு அடி உயரத்திற்கு மணல் குவிந்தது.
வாகனங்கள் மணலில் சிக்கியதால் பயணிகள் தவித்தனர்.
இதையடுத்து நேற்று ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் மணல் அகற்றப்பட்டது.


