ADDED : செப் 30, 2025 03:56 AM
திருவாடானை: திருவாடானை, தொண்டி பகுதியில் நாளை (அக்.,1) சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு வீடு, அலுவலங்களில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இன்று அலங்கார பொருட்கள், பூஜைக்காக பழங்கள், பூ போன்றவற்றை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஊராட்சி அலுவலகங்கள் சுத்தம் செய்யப்பட்டு விழா ஏற்பாடுகள் நடந்து வருகிறது.


