ADDED : செப் 13, 2025 11:27 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் என்மனங் கொண்டான் (உச்சிப்புளி) கிளை நுாலகத்தில் பாரதியார் நினைவு தின வாசகர் வட்டத்தலைவர் சுப்பையா தலைமையில் நடந்தது.
வாசகர் வட்ட பொருளாளர் நாராயணமூர்த்தி முன்னிலை வகித்தார். கிளை நுாலகர் பால சோமநாதன் வரவேற்றார்.
பாரதியின் மொழிப்பற்று தலைப்பில் கவிஞர் அழகுடையான் உரையாற்றினார். நடப்பு ஆண்டில் நுாலக உறுப்பினர், புரவலர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என தீர் மானிக்கப்பட்டது.