Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீன்பிடிக்க இன்னும் 12 நாட்களே ராமேஸ்வரத்தில் படகுகள் ஆய்வு

மீன்பிடிக்க இன்னும் 12 நாட்களே ராமேஸ்வரத்தில் படகுகள் ஆய்வு

மீன்பிடிக்க இன்னும் 12 நாட்களே ராமேஸ்வரத்தில் படகுகள் ஆய்வு

மீன்பிடிக்க இன்னும் 12 நாட்களே ராமேஸ்வரத்தில் படகுகள் ஆய்வு

ADDED : ஜூன் 02, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்,: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் முடிய இன்னும் 12 நாட்கள் உள்ளதால் நேற்று ராமேஸ்வரத்தில் விசைப்படகுகளை மீன்துறையினர் ஆய்வு செய்தனர்.

மீன்கள் இனப்பெருக்கத்திற்கு ஏப்.,15 முதல் ஜூன் 14 வரை விசைப்படகில் மீன்பிடிக்க தமிழக அரசு தடை விதித்தது. இத்தடை காலத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபத்தில் உள்ள விசைப்படகுகளில் பழுதான இன்ஜின், சேதமடைந்த மரப்பலகையை சரி செய்யும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் முடிய இன்னும் 12 நாட்கள் உள்ளதால் நேற்று ராமேஸ்வரம் மீன்துறை உதவி இயக்குநர் தமிழ்மாறன் தலைமையில் மீன்துறை ஆய்வாளர்கள், ஊழியர்கள் ராமேஸ்வரத்தில் உள்ள 700 விசைப்படகுகளை ஆய்வு செய்தனர்.

இதில் படகில் உள்ள இன்ஜின் குதிரை திறன், படகின் உறுதித் தன்மை, மீனவர்களுக்கான பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் படகு ஆர்.சி., புக், படகு உரிமையாளரின் ஆதார் கார்டு உள்ளிட்ட பல ஆவணங்களை சரி பார்த்தனர்.

இந்த ஆய்வுக்குப் பின் விதிமுறைக்கு உட்பட்ட படகிற்கு மானிய விலையில் டீசல் வழங்க புத்தகம் வழங்கப்பட உள்ளது.

*எஸ்.பி.பட்டினம் முதல் தேவிபட்டினம் ஆற்றங்கரை வரை 78 விசைப்படகுகளும், 2200 நாட்டுப்படகுகளும் உள்ளன. இந்நிலையில் நேற்று விசைபடகுகள் ஆய்வு செய்யும் பணிகள் நடந்தது.

மீன்வளத்துறை அலுவலர்கள் மற்றும் மரைன் போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர். படகு சான்றிதழ், படகின் நிலை மற்றும் தரத்தை உறுதிபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் சரிபார்க்கபட்டது. இன்று (ஜூன் 3) நாட்டுப்படகுகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us