Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இடுகாடு பாதை பிரச்னை: அதிகாரிகள் தலையீட்டால் உடல் அடக்கம்

இடுகாடு பாதை பிரச்னை: அதிகாரிகள் தலையீட்டால் உடல் அடக்கம்

இடுகாடு பாதை பிரச்னை: அதிகாரிகள் தலையீட்டால் உடல் அடக்கம்

இடுகாடு பாதை பிரச்னை: அதிகாரிகள் தலையீட்டால் உடல் அடக்கம்

ADDED : அக் 08, 2025 01:06 AM


Google News
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே சூரமடை பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மாரியம்மாள் 67, நேற்று முன்தினம் உடல்நலக் குறைவால் இறந்தார். இந்நிலையில் இடுகாட்டுக்கு உடலை எடுத்துச் செல்லும் பாதை குறிப்பிட்ட பகுதியில் தனி நபருக்கு சொந்தமான இடம் எனக் கூறி யாரும் பயன்படுத்தாத வகையில் அந்த பாதையை அடைத்திருந்தனர். இதனால் மாரியம்மாள் உடலை இடுகாட்டுக்கு கொண்டு செல்ல பாதை வசதி கேட்டு ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் ராமமூர்த்தியிடம் உறவினர்கள் மனு அளித்தனர்.

இதையடுத்து தாசில்தார் ராமமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தனி நபரால் அடைக்கப்பட்டிருந்த பாதையை அகற்றி உடலை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுத்தனர். மேலும் தனி நபர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் தேடிக் கொள்ளும் வரை பாதையை ஆக்கிரப்பு செய்யக்கூடாது என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us