/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு மகளிர் கல்லுாரியில் இன்று கலந்தாய்வு துவக்கம் அரசு மகளிர் கல்லுாரியில் இன்று கலந்தாய்வு துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் இன்று கலந்தாய்வு துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் இன்று கலந்தாய்வு துவக்கம்
அரசு மகளிர் கல்லுாரியில் இன்று கலந்தாய்வு துவக்கம்
ADDED : ஜூன் 04, 2025 12:50 AM
பரமக்குடி: பரமக்குடி அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இன்று (ஜூன் 4) முதல் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்க உள்ளது.
கல்லுாரியில் பி.ஏ., தமிழ் இலக்கியம், பி.ஏ., ஆங்கில இலக்கியம், பி.காம்., (சி.ஏ.,) பி.பி.ஏ., பி.ஏ., பொருளாதாரம் (தமிழ் வழி) மற்றும் பி.எஸ்.சி., கணினி அறிவியல் ஆகிய இளநிலை பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. இணைய வழியில் விண்ணப்பித்த மாணவிகள் ஜூன் 4ல் துவங்கி 14 வரை நடக்கும் சேர்க்கை கலந்தாய்வில் காலை 9:30 மணிக்குள் கல்லுாரிக்கு வர வேண்டும்.
அப்போது பதிவிறக்கப்பட்ட விண்ணப்ப படிவ நகல், 10, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், டி.சி., ஜாதி சான்றிதழ், சமீபத்திய புகைப்படம், பேங்க் பாஸ்புக், ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட அசல் மற்றும் தலா 3 ஜெராக்ஸ் எடுத்து வர வேண்டும் என கல்லுாரி முதல்வர் வனஜா தெரிவித்துள்ளார்.