ADDED : ஜூன் 04, 2025 11:35 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கோனேரியேந்தலில் கே.என்.எல். பாய்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில் 5ம் ஆண்டு மாவட்ட கிரிக்கெட் போட்டி நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டனர்.
பார்த்திபனுார் அணி முதலிடம், கே.என்.எல்.,பாய்ஸ் கிளப் இரண்டாம் இடம், முனியப்பன் பாய்ஸ் அணி மூன்றாம் இடம், கீழக்கொடுமலுார் அணி நான்காம் இடமும் பெற்றது. அணிகளுக்கு ரொக்கப்பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோனேரியேந்தல் மக்கள் செய்தனர்.