ADDED : அக் 11, 2025 04:03 AM

திருவாடானை: திருவாடானை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தேங்கிய மழை நீரால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருவாடானை- மங்களக்குடி ரோட்டில் எல்.கே.நகர் அருகே தேங்கிய மழை நீரால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.
குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் ரோட்டில் தேங்கிய மழை நீரை கடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைந்தனர்.
அப்பகுதி மக்கள் கூறுகையில், கனமழை பெய்யும் போது மழை நீர் செல்ல போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்பது வாடிக்கையாகி விட்டது.
இதே போன்ற அவலங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதே போல் பல்வேறு ரோடுகளில் மழை நீர் தேங்கியுள்ளது என்றனர்.


