/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஒச்சத்தேவன் கோட்டையில் சேதமடைந்த தடுப்பணை மழைக்காலங்களில் நீர் தேக்குவதில் சிக்கல் ஒச்சத்தேவன் கோட்டையில் சேதமடைந்த தடுப்பணை மழைக்காலங்களில் நீர் தேக்குவதில் சிக்கல்
ஒச்சத்தேவன் கோட்டையில் சேதமடைந்த தடுப்பணை மழைக்காலங்களில் நீர் தேக்குவதில் சிக்கல்
ஒச்சத்தேவன் கோட்டையில் சேதமடைந்த தடுப்பணை மழைக்காலங்களில் நீர் தேக்குவதில் சிக்கல்
ஒச்சத்தேவன் கோட்டையில் சேதமடைந்த தடுப்பணை மழைக்காலங்களில் நீர் தேக்குவதில் சிக்கல்
ADDED : செப் 25, 2025 11:24 PM
சாயல்குடி: சாயல்குடி அருகே ஒச்சத்தேவன் கோட்டை மற்றும் காணிக்கூர் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட கண்மாயில் சேதமடைந்த நிலையில் தடுப்பணை உள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட தடுப்பணை சேதமடைந்து இடிபாடுகளுடன் உள்ளது.
இதனால் ஒவ்வொரு பருவமழை காலங்களிலும் மழைநீர் சேகரிக்க வழியின்றி தண்ணீர் வீணாகிறது.
நா.த.க., கடலாடி மேற்கு மாவட்ட செயலாளர் சதாம் உசேன் மற்றும் நிர்வாகிகள் நாகநாதன், வெங்கடேஷ், அருள்ராஜ் ஆகியோர் கூறியதாவது:
520 ஹெக்டேர் கொண்ட ஒச்சத்தேவன் கோட்டை பாசன கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது. எனவே அவற்றை வெட்டி அகற்றி மழைகாலத்திற்கு முன் கரைகளை பலப்படுத்த வேண்டும். சேதமடைந்த நிலையில் உள்ள தடுப்பணைகளை தரமாக கட்டினால் அப்பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் சேமிக்கப்படும்.
கண்மாய் பாசன பொதுப்பணித்துறை அதிகாரிகள் வருவாய்த்துறையினர் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.