Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ இலங்கையில் கடன் தொல்லை: தனுஷ்கோடி வந்த அகதிகள்

இலங்கையில் கடன் தொல்லை: தனுஷ்கோடி வந்த அகதிகள்

இலங்கையில் கடன் தொல்லை: தனுஷ்கோடி வந்த அகதிகள்

இலங்கையில் கடன் தொல்லை: தனுஷ்கோடி வந்த அகதிகள்

ADDED : ஜூன் 10, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
ராமேஸ்வரம்: இலங்கையில் கடன் தொல்லையில் சிக்கிய தம்பதி உள்ளிட்ட 5 பேர் கள்ளத்தனமாக படகில் தனுஷ்கோடிக்கு அகதியாக வந்துள்ளனர்.

இலங்கை கண்டி மாவட்டம் கம்பாலா சேர்ந்த முகமது ரியாஸ்43, மனைவி பாத்திமா பர்கானா 34, மகன் முகமது யாக்யா 12, மகள்கள் அலிசா 4, அமீரா 4, ஆகியோர் நேற்று முன்தினம் இரவு இலங்கை மன்னாரில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்டு நேற்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் வந்திறங்கினர்.

தனுஷ்கோடி மரைன் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்ததாவது:

முகமது ரியாஸ், கண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தலைமை உணவு வகை தயாரிப்பாளராக (செப்) வேலை பார்த்துள்ளார். சைடு தொழிலாக பலவித ருசியில் மசாலா பொடி தயாரித்து ஓட்டல், கடைகள் வீடுகளில் விற்றார்.

இதற்காக பலரிடமும் ரூ. 2 கோடி கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. கடன்காரர்கள் தொல்லை செய்ததால், அவர்களிடம் தப்பிக்க இந்தியா வந்ததாக தெரிவித்தனர்.

அவர்களிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us