ADDED : பிப் 12, 2024 04:45 AM

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரத்தில் இலங்கையில் வாடும் மீனவர்களை மீட்க தவறிய மத்திய அரசை கண்டித்து தி.மு.க., வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
கடந்த சில மாதமாக இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை தாக்கி, கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். மேலும் மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிமுதல் செய்து இலங்கை கரையில் சேதமடைந்து கிடக்கிறது.
மீனவர்கள், படகுகளை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் இலங்கையின் அராஜக போக்கை கண்டிக்காத மத்திய அரசை கண்டித்து நேற்று ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதில் தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.எல். ஏ.,க்கள் பரமக்குடி முருகேசன், ராமநாதபுரம் காதர்பாட்ஷா, ராமேஸ்வரம் நகராட்சி தலைவர் நாசர்கான், முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுனன், நகராட்சி துணைத் தலைவர் தெட்சிணாமூர்த்தி, மண்டபம் பேரூராட்சி தலைவர் ராஜா, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் ரவி பங்கேற்றனர்.