/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விளை நிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம் விளை நிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம்
விளை நிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம்
விளை நிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம்
விளை நிலங்களில் ஆட்டுக்கிடை அமைக்க விவசாயிகள் ஆர்வம்
ADDED : செப் 16, 2025 04:00 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான நாகனேந்தல், ஊரணங்குடி, வெட்டுக்குளம், அழியாதான் மொழி, பாரனுார், ஆவரேந்தல், சித்துார்வாடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் நெல் விதைப்பு செய்வதற்கான ஆயத்த பணிகளை விவசாயிகள் துவங்கி உள்ளனர்.
இப்பகுதிகளில் நெல் விதைப்பு செய்வதற்கு இன்னும் சில வாரங்கள் உள்ளது.
இந்நிலையில் விதைப்புக்கு தயார் நிலையில் உள்ள விளை நிலங்களில் மண்வளம் மற்றும் இயற்கை உரத்தை மேம்படுத்தும் வகையில் வயல்களில் இரவு நேரத் தில் ஆட்டுக் கிடைகளை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர்.
விளை நிலங்களில் ஆட்டுக்கிடை அமைப்பதன் மூலம் ஆடுகளின் புழுக்கைகள், சிறுநீர் உள்ளிட்டவை இயற்கை உரமாக மாறி, நெற்பயிர் வளர்ச்சிக்கு உதவுவதால் ஆட்டுக்கிடை அமைப்பதில் அதிக ஆர்வம் காட்டுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.