/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மீனவர் கிராமங்களில் உள்ளூர் இளைஞர்கள் மூலம் களஆய்வு மீனவர் கிராமங்களில் உள்ளூர் இளைஞர்கள் மூலம் களஆய்வு
மீனவர் கிராமங்களில் உள்ளூர் இளைஞர்கள் மூலம் களஆய்வு
மீனவர் கிராமங்களில் உள்ளூர் இளைஞர்கள் மூலம் களஆய்வு
மீனவர் கிராமங்களில் உள்ளூர் இளைஞர்கள் மூலம் களஆய்வு
ADDED : செப் 25, 2025 03:29 AM

ராமநாதபுரம் : த க் ஷிண் அறக்கட்டளை சார்பில் மீனவர் கிராமங்களில் உள்ளூர் இளைஞர்கள் மூலம் கள ஆய்வு நடத்தினர். இதன் நிறைவு நிகழ்ச்சி மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் தலைமையில் நேற்று ராமநாதபுரத்தில் நடந்தது.
அறக்கட்டளை நிர்வாகி ஹரிபிரியா கூறியதாவது:
மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி முறையையும் தற்போதைய நவீன மீன்பிடி முறையையும் இணைக்கும் முயற்சியாக 'நெய்தல் நண்பர்கள்' எனும் திட்டம் துவக்கப்பட்டது.
இதில் கிராமப்பகுதியை சேர்ந்த அருள் அந்தோணி முத்து, இனிதா பிரகாசி, எப்சிபா பியூலா, சந்திமரி ரூத், ட்ரியல் கேத்ரின், டேனியல் வினோத், பியோ லிஜோரா, மரிய ஹாட்லின் ஆகியோர் கள ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
அந்த அறிக்கை 'நெய்தல் நண்பர்களின் களப்பயணம்' எனும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது.
இதில் பாரம்பரிய மீன்பிடி முறையின் தற்போதைய நிலை, கடல் சார் வளங்களை பாதுகாப்பதன் அவசியம், மீனவ மக்களின் வாழ்வாதாரம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இந்த தரவுகள் மீனவர்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த உதவியாக இருக்கும்.
இதில் சில ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றார். ஆய்வாளர்களுக்கு துணை இயக்குனர் கோபிநாத் சான்றிதழ் வழங்கி, புத்தகத்தை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது:
மீனவ கிராமங்களை சேர்ந்த உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தி கள ஆய்வு மேற்கொண்டது பாராட்டத்தக்கது. அவர்கள் மேற்கொண்ட ஆய்வு மீனவ மக்களுக்கு உதவியாக இருக்கும்.
இந்த முயற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும் என்றார்.
மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் சிவக்குமார், தமிழ்மாறன், த க் ஷிண் அறக்கட்டளை நிறுவனர் நவீன், ஓலைக்குடா கிராமத் தலைவர் ஜெரோம் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.