/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவாகவில்லை ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவாகவில்லை
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவாகவில்லை
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவாகவில்லை
ரேஷன் கடைகளில் விரல் ரேகை பதிவாகவில்லை
ADDED : ஜூன் 11, 2025 11:07 PM

திருவாடானை: விரல் ரேகை பதிவு நடைமுறையை மேற்கொள்வதில் சிக்கலால் ரேஷன் பொருட்கள் வினியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர்.
ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு ரேஷன் பொருள் வழங்கும் போது அவர்களது கைவிரல் ரேகை அல்லது கருவிழி ரேகை பதிவு செய்யப்படுகிறது. சிலருக்கு ரேகை பதிவாகவில்லை.
திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகளும், 36 ஆயிரத்து 650 கார்டுதாரர்களும் உள்ளனர்.
பொருட்கள் வாங்க செல்வோரின் ஆதார் பதிவு அடிப்படையிலான தரவுகளுடன் சரி பார்த்து பி.ஓ.எஸ்., கருவி மூலம் விரல் ரேகை பதிவுகள் ஏற்கப்படுகின்றன. கடைக்கு பொருட்கள் வாங்க வரும் பெரும்பாலான முதியோர் கைவிரல் ரேகைகள் பதிவாகவில்லை.
விரல் ரேகை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டால் மட்டுமே பொருட்கள் வாங்க முடியும். நேற்று திருவாடானை அருகே டி.கிளியூரில் ரேஷன் பொருட்கள் வாங்க சென்ற சிலருக்கு ரேகை பதிவாகவில்லை.
கிராம மக்கள் கூறுகையில், ஒருவர் பொருள் வாங்க 15 முதல் 20 நிமிடம் ஆகிறது. ரேகை பதிவாகவில்லை என்று கூறுவதால் பொருட்கள் வாங்க முடியவில்லை என்றனர். திருவாடானை சிவில் சப்ளை அலுவலர்கள் கூறுகையில், முறைகேடுகளை தடுக்கவே இத் திட்டம் செயல்படுத்தப்பட்டுஉள்ளது. ரேஷன் கார்டில் பெயர் இருக்கும் ஒருவரின் கை ரேகை பதிவு செய்தால் போதும். பொருட்கள்வாங்கலாம் என்றனர்.