/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ராமநாதபுரம் டெக்கரேஷன் கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி சேதம் * 3 மணி நேரம் போராடி வீரர்கள் அணைத்தனர் ராமநாதபுரம் டெக்கரேஷன் கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி சேதம் * 3 மணி நேரம் போராடி வீரர்கள் அணைத்தனர்
ராமநாதபுரம் டெக்கரேஷன் கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி சேதம் * 3 மணி நேரம் போராடி வீரர்கள் அணைத்தனர்
ராமநாதபுரம் டெக்கரேஷன் கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி சேதம் * 3 மணி நேரம் போராடி வீரர்கள் அணைத்தனர்
ராமநாதபுரம் டெக்கரேஷன் கோடவுனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 கோடி சேதம் * 3 மணி நேரம் போராடி வீரர்கள் அணைத்தனர்
ADDED : ஜூன் 11, 2025 02:19 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் சக்கரக்கோட்டை ரோட்டில் உள்ள தனியார் டெக்கரேஷன் கோடவுனில் தீப்பற்றியதில் ரூ.5 கோடி மதிப்பிலான ஏசி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலாகின. மூன்று மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த அலியார் 60, ஸ்டார் டெக்கரேஷன் என்ற நிறுவனத்தை 25 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவர் ராமநாதபுரத்தில் முக்கிய பிரமுகர்களின் திருமண விழா, நிகழ்ச்சிகளுக்கு மேடை அலங்காரம் செய்து வருகிறார். 3 ஆண்டுகளுக்கு முன்பு சக்கரக்கோட்டை ரோட்டில் கோடவுன் அமைத்து மேடை அலங்காரத்துக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வைத்திருந்தார்.
நேற்று காலை 11:00 மணிக்கு கோடவுனில் தீப்பற்றி எரிய துவங்கியது. தீயணைப்புத்துறையினருக்கு கோடவுன் பணியாளர்கள் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் இரண்டு வாகனங்களில் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்து மின் கசிவால் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். ஏசி, விலை உயர்ந்த ஆடம்பர பொருட்கள், அலங்கார பொருட்கள் ரூ.5 கோடி மதிப்பில் தீயில் கருகி சாம்பலாகின. கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.--------