/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வண்ணாங்குண்டில் வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் விவசாயிகள் அறுவடை பணிகள் தாமதம்வண்ணாங்குண்டில் வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் விவசாயிகள் அறுவடை பணிகள் தாமதம்
வண்ணாங்குண்டில் வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் விவசாயிகள் அறுவடை பணிகள் தாமதம்
வண்ணாங்குண்டில் வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் விவசாயிகள் அறுவடை பணிகள் தாமதம்
வண்ணாங்குண்டில் வயலில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் விவசாயிகள் அறுவடை பணிகள் தாமதம்
ADDED : பிப் 01, 2024 10:49 PM
ரெகுநாதபுரம்,- வண்ணாங்குண்டு ஊராட்சியில் நெல் வயல்களில் அதிகளவு மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
நடப்பாண்டில் நெல் விவசாயம் விவசாயிகளுக்கு கைகொடுத்து வரும் நிலையில் நன்கு விளைந்த நெல் வயல்களில் முழங்கால் அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. 110 முதல் 120 நாட்களில் அறுவைடை செய்யப்படும் நெற்கதிர்களை அறுவடை செய்வதற்கு விவசாயிகள் முயற்சி எடுத்து வருகின்றனர்.
நெல் வயல்களில் அதிகளவு நீர் சூழ்ந்துஉள்ளதால் நெற்கதிர்களின் பாரம் தாங்காமல் 90 சதவீதம் நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளது.
வண்ணாங்குண்டு விவசாயிகள் கூறியதாவது:
எதிர்பார்த்த விளைச்சல்இருந்தும் அவற்றை அறுவடை செய்வதற்காக ஆண்களும், பெண்களும் முழங்கால் அளவு தண்ணீரில் அறுவடை செய்து மூடைகளில் சேமித்து வருகிறோம். பெரும்பாலான வயல்களில் தண்ணீர் வெளியே செல்வதற்கு வழி இல்லாததால் மோட்டார் பயன்படுத்தி நீரை வெளியேற்றி வருகிறோம்.
நிலத்தில் தண்ணீர் வற்றியவுடன் கதிர் அறுக்கும் இயந்திரம் அல்லது விவசாய தொழிலாளர்கள் மூலம் நெல் அறுவடை செய்ய உள்ளோம்.
மீண்டும் நிலத்தில் விழுந்து முளைப்பதற்கு முன் இந்த நடவடிக்கையை துரிதமாக எடுக்க வேண்டி உள்ளது. தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் இரவும், பகலும் ஈடுபட்டு வருகிறோம் என்றனர்.


