ADDED : செப் 22, 2025 03:52 AM

ராமேஸ்வரம்: -புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி நேற்று தமிழகத்தின் பல பகுதியில் இருந்து பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர்.
முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் புரோகிதர்கள் மூலம் திதி, தர்ப்பணம் பூஜை செய்தனர். பின் அக்னி தீர்த்த கடல், அதன்பின் கோயில் வளாக 22 தீர்த்தங்களில் நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி, அம்மனை தரிசித்தனர். பக்தர்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.