Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/உங்களைத் தேடி உங்கள் ஊரில்: மக்களை சந்தித்தார் கலெக்டர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: மக்களை சந்தித்தார் கலெக்டர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: மக்களை சந்தித்தார் கலெக்டர்

உங்களைத் தேடி உங்கள் ஊரில்: மக்களை சந்தித்தார் கலெக்டர்

ADDED : பிப் 01, 2024 07:12 AM


Google News
Latest Tamil News
கீழக்கரை : -'உங்களைத் தேடி உங்கள் ஊரில்,' என்ற புதிய திட்டத்தின் படி நேற்று கீழக்கரை தாலுகாவில் உள்ள கிராமங்களிலும், நகராட்சி அலுவலகத்திலும் கலெக்டர் விஷ்ணு சந்திரன், அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்களை சந்திக்கும் நிகழ்வு நடந்தது.

நேற்று காலை 9:00 மணி முதல் இன்று(பிப்.1) காலை 9:00 மணி வரை கலெக்டர் அரசுத் துறை அலுவலகங்களை ஆய்வு செய்து மக்கள் வழங்கும் கோரிக்கை மனுகளை பெறும் வகையில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருப்புல்லாணி யூனியன் அலுவலகத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மையத்திற்கு சென்று இணையதளத்தில் உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்து பயன்பெற்ற விவசாயிகளின் தொலைபேசி எண்ணில் கலெக்டர் அவர்களை தொடர்பு கொண்டு அரசின் திட்டங்கள் உங்களின் தேவைக்கேற்ப கிடைக்கிறதா என அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். திருப்புல்லாணியில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கும் விபரம் குறித்தும் உணவு பொருள்களின் தரம், இருப்பு குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின் திருப்புல்லாணி வி.ஏ.ஓ., அலுவலகத்திற்கு சென்று பதிவேடுகளை பார்வையிட்டு அருகில் உள்ள பயன்பாட்டற்ற கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வருவாய்த் துறையினரிடம் கேட்டுக்கொண்டார்.

திருப்புல்லாணி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சி.சி.டி.வி., கேமரா, பதிவேடுகளை பார்வையிட்டார்.

சேதுக்கரை அருகே மேலப்புதுக்குடி நலவாழ்வு மையத்தையும் அங்குள்ள கிராமத்தில் மக்களை தேடி மருத்துவம் முறையாக கிடைக்கிறதா என கேட்டறிந்தார்.

தில்லையேந்தல் ஊராட்சி, இதம்பாடல் ஊராட்சியில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் போதிய குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

வேளாண் துறை இணை இயக்குனர் தனுஷ்கோடி, சமூக பாதுகாப்பு தனித்துணை கலெக்டர் மாரிசெல்வி, கீழக்கரை தாசில்தார் பழனிக்குமார், திருப்புல்லாணி வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேஸ்வரி உட்பட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us