Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஆர்.ஐ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு

ஆர்.ஐ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு

ஆர்.ஐ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு

ஆர்.ஐ., அலுவலக புதிய கட்டடம் திறப்பு

ADDED : பிப் 29, 2024 10:22 PM


Google News
முதுகுளத்துார்,- தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் அருகே காக்கூர் கிராமத்தில் ஆர்.ஐ., அலுவலக புதிய கட்டடம் திறக்கப்பட்டது.

முதுகுளத்துார் தாலுகா அலுவலகத்திற்கு உட்பட்ட முதுகுளத்துார் வடக்கு, தெற்கு, காக்கூர்,தேரிருவேலி, மேலக்கொடுமலுார், கீழத்துாவல் உள்வட்டம் வருவாய் கிராமங்களுக்கு உள்ளடக்கியது. இங்கு வருவாய் ஆய்வாளருக்கு என்று தனிஅலுவலகம் இல்லாமல் தாலுகா அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனால் கிராம மக்கள் அவரை தேடி அலையும் அவலநிலை உள்ளது. அந்தந்த வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் காக்கூர், தேரிருவேலி கிராமத்தில் புதிதாக ஆர்.ஐ.,அலுவலகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது.

கட்டி முடிக்கப்பட்ட கட்டடம் திறக்கப்படாமல்காட்சிப்பொருளாக இருந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக புதிய ஆர்.ஐ., அலுவலகம், குடியிருப்பு கட்டடத்தை வருவாய்த்துறையினர்​திறந்து வைத்தனர். உடன் காக்கூர், புளியங்குடி, ஆதனக்குறிச்சிகிராம மக்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us