ADDED : ஜூன் 28, 2025 11:29 PM

திருவாடானை:திருவாடானை, தொண்டியில் பலாப்பழம் விற்பனை அமோகமாக நடக்கிறது.
ஆண்டுதோறும் ஏப்., முதல் ஜூலை வரை பலாப்பழம் அறுவடை நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு அறுவடை களைகட்டியுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து சரக்கு வாகனங்களில் விற்பனைக்கு வருகிறது.
திருவாடானை, தொண்டி பகுதியில் வாரச்சந்தை மற்றும் சாலை ஓரங்களில் பலாப்பழங்கள் குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்படுகிறது.


