Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ உழவர் நலசேவை மையம் அமைக்க 30 சதவீதம் மானியத்தில் கடன் உதவி

உழவர் நலசேவை மையம் அமைக்க 30 சதவீதம் மானியத்தில் கடன் உதவி

உழவர் நலசேவை மையம் அமைக்க 30 சதவீதம் மானியத்தில் கடன் உதவி

உழவர் நலசேவை மையம் அமைக்க 30 சதவீதம் மானியத்தில் கடன் உதவி

ADDED : அக் 02, 2025 04:19 AM


Google News
ராமநாதபுரம் : உழவர் நலசேவை மையம் அமைக்க 30 சதவீத மானியத்தில் வங்கி கடன் உதவி பெறலாம் என மாவட்ட வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

விவசாயிகளின் நலனை முன்னேற்றும் நோக்கில் தமிழகம் முழுவதும் 1000 உழவர் நல சேவை மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இத்திட்டத்தில் ரூ.10 லட்சம் முதல் ரூ.30 லட்சம் மதிப்பிலான மையங்கள் அமைக்க ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.

அத்துடன் விவசாயிகளுக்கு தேவையான தரமான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்குதல் என அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

மேலும், வேளாண் உற்பத்தியை பெருக்குவது, பூச்சிநோய் மேலாண்மை, வேளாண் பொருட்களை மதிப்புக் கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

ராமநாதபுரம் வட்டாரத்தில் உழவர் நலசேவை மையம் அமைக்க விரும்புவோர் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரில் இயங்கிவரும் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

வேளாண்மை பிரிவில் பட்டதாரி (பி.எஸ்.சி., அக்ரி), பட்டயம் (டிப்ளமோ அக்ரி) படித்திருக்க வேண்டும்.

தகுதியான நபர்களுக்கு 30 சதவீத மானியத்தில் வங்கிகள் மூலம் கடன் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். இதுகுறித்த கூடுதல் தகவல்களுக்கு வட்டார வேளாண்மை அலுவலர் ரவிச்சந்திரன் (87788 66217), வேளாண்மை உதவி இயக்குநர் அம்பேத்குமார் (99528 42093) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us