ADDED : அக் 02, 2025 04:19 AM
கீழக்கரை : ஏர்வாடி தர்காவில் மிலாது விழா மற்றும் வலிகள் கோமான் புகழ் கூறும் நினைவு விழா நடந்தது. வாஹதிகள் பேரவை மற்றும் ஏர்வாடி நகர் மஜ்லிசுல் உலமா சபை சார்பில் நடந்த விழாவில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் லெவ்வை தலைமை வகித்தார். வாஹித் பாத்திமா அறக்கட்டளை டிரஸ்டி உமர் முன்னிலை வகித்தார். மலேசிய தொழிலதிபர் டத்தோ அப்துல் அஜீஸ், ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சார்பை தலைவர் அகமது இப்ராஹிம் லெவ்வை உட்பட பலர் பங்கேற்றனர்.
அத்திக்கடை அரபிக் கல்லுாரி முதல்வர் பவ்ஸ் அப்துர் ரஹீம் சிறப்புரையாற்றினார். தர்கா வளாகத்தில் யாத்திரீகர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக தனியார் ஏ.டி.எம்., திறப்பு விழா நடந்தது.
உலக நன்மைக்கான சிறப்பு துவா ஓதப்பட்டது.


