ADDED : அக் 02, 2025 04:18 AM

திருவாடானை : திருவாடானை வடக்குதெரு முத்துமாரியம்மன் கோயில் விழா செப்.23ல் காப்புகட்டுதலுடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. வீடுகளில் வளர்க்கபட்ட முளைப் பாரிகளை கோயிலில் வைத்து பெண்கள் வழிபாடு செய்தனர்.
அதனை தொடர்ந்து, அருகில் உள்ள கோயில் தெப்பக்குளத்தில் கரைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக பெண்கள் முளைப்பாரிகளை வைத்து கும்மியாட்டம் ஆடினர்.


