ADDED : பிப் 29, 2024 10:16 PM
ஆர்.எஸ்.மங்கலம், - ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி மாதாந்திரகவுன்சில் கூட்டம் பேரூராட்சி தலைவர் மவுசூரியா தலைமையில் நடந்தது.
செயல் அலுவலர் மாலதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாதாந்திர வரவு செலவுகள் குறித்தும், வார்டுகளில் உள்ள மக்கள் பிரச்னை குறித்தும் கவுன்சிலர்கள் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தினர்.


