/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ செப்.21ல் நவராத்திரி விழா துவக்கம்; கொலு பொம்மைகள் விற்பனை செப்.21ல் நவராத்திரி விழா துவக்கம்; கொலு பொம்மைகள் விற்பனை
செப்.21ல் நவராத்திரி விழா துவக்கம்; கொலு பொம்மைகள் விற்பனை
செப்.21ல் நவராத்திரி விழா துவக்கம்; கொலு பொம்மைகள் விற்பனை
செப்.21ல் நவராத்திரி விழா துவக்கம்; கொலு பொம்மைகள் விற்பனை
ADDED : செப் 18, 2025 10:52 PM

ராமநாதபுரம்; நவராத்திரி விழா செப்.,21ல் துவங்கி அக்.,1ல் சரஸ்வதி பூஜையும், அக்.,2ல் விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் துர்கா தேவியின் வெவ்வேறு அவ தாரங்கள் அலங்கரிக்கப்பட்டு பூஜை செய்யப்படும். நவராத்திரி கொலுவில் 3, 5, 7, 9 அல்லது 11 படிகள் என்ற அடிப் படையில் வீடுகள் மற்றும் கோயில்களில் அமைப்பர். இப்படிகளில் மனித வாழ்வின் படிப்படியான உயர்வு கள், உலக உயிரினங்கள் மற்றும் கடவுள்களின் சிலைகள் வைக்கப்படும்.
நடப்பாண்டில் இவ்விழா செப்.,21ல் துவங்கி முக்கிய நிகழ்ச்சிகளாக அக்.,1ல் சரஸ்வதி (ஆயுத) பூஜையும், அக்.,2ல் விஜய தசமி கொண்டாடப் படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரத்தில் விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, பாலாஜி, பெருமாள், தாயார், கண்ணன் உள்ளிட்ட கொலுவை அலங் கரிக்கும் பல வண்ண பொம்மைகள் விற்னைக்கு வந்துள்ளன. ரூ.50 முதல் ரூ.600 வரை விலையில் உள்ளன. தங்களுக்கு விருப்பமான பொம்மைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.