ADDED : அக் 09, 2025 11:14 PM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே நோக்கன்கோட்டையை சேர்ந்தவர் சத்திய தேவா 36. ஆறு மாதங்களுக்கு முன்பு இவருக்கும் அபிராமி என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், கணவன் மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் அபிராமி திருவாடானை பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.
இதனால் மன உளைச்சலில் இருந்த சத்திய தேவா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஆர். எஸ்.மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


