Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ விதை விற்பனையில் விதி மீறல்  79 நிலையங்களுக்கு நோட்டீஸ்

விதை விற்பனையில் விதி மீறல்  79 நிலையங்களுக்கு நோட்டீஸ்

விதை விற்பனையில் விதி மீறல்  79 நிலையங்களுக்கு நோட்டீஸ்

விதை விற்பனையில் விதி மீறல்  79 நிலையங்களுக்கு நோட்டீஸ்

ADDED : அக் 11, 2025 03:57 AM


Google News
ராமநாதபுரம்: விதைகள் சேமிப்பு முறை மற்றும் விற்பனை விதிகளை பின்பற்றாத காரணத்தால் நடப்பு ஆண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 31, சிவகங்கை மாவட்டத்தில் 48 என 79 அரசு, தனியார் விதை விற்பனை நிலையங்களுக்கு நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவங்கை மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குநர் இப்ராம்சா கூறியிருப்ப தாவது:

விதை உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை விதைச்சட்டம் 1966, விதை விதிகள் 1968, விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955-ன் படி நடைபெற வேண்டும்.விதை விற்பனை நிலையங்களில் விலைப்பட்டியல் மற்றும் இருப்பு விவரப்பலகை வைக்க வேண்டும்.

விதை கொள்முதல் பட்டியல், இருப்பு பதிவேடு, விற்பனை ரசீது ஆகியவைகளை பராமரிக்க வேண்டும்.

பொதுச் சுகாதரம் பேணாமல் இருத்தல், விதைகள் சேமிப்பு முறையாக செய்யாமல் இருப்பது, விதை விற்பனை நிறுவனங்களை நீண்ட காலத்திற்கு மூடி வைத்திருப்பது போன்ற காரணங்களுக்காக இவ்வாண்டு இது வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களுக்கு 31 நோட்டீஸ்களும், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விதை விற்பனை நிறுவனங்களுக்கு 48 நோட்டீஸ்களும் வழங்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்ய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே விதை விற்பனை நிலையங்கள் மேற்படி விதைச்சட்டம் மற்றும் விதிகளின் படி இயங்க வேண்டும் என கூறியுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us