/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டில் மக்கள் சிரமம் நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டில் மக்கள் சிரமம்
நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டில் மக்கள் சிரமம்
நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டில் மக்கள் சிரமம்
நடப்பதற்கே லாயக்கற்ற ரோட்டில் மக்கள் சிரமம்
ADDED : மே 26, 2025 02:04 AM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கேளல் கிராமத்தில் இருந்து அப்பனேந்தல் செல்லும் ரோட்டில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து நடப்பதற்கு லாயக்கற்ற ரோட்டில் மக்கள் சிரமப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அருகே அப்பனேந்தல் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.
கேளல் கிராமத்தில் இருந்து அப்பனேந்தல், அ.நாகனேந்தல், அ.நெடுங்குளம் கிராமங்களுக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தார் ரோடு அமைக்கப்பட்டது.
பிறகு முறையாக பராமரிப்பு பணி செய்யப்படாதால் ரோடு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் நடப்பதற்கு மக்கள் சிரமப்படுகின்றனர்.
அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் செல்ல முடியவில்லை. விவசாயத்திற்கு தேவையான இடுபொருட்களை எடுத்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சேதமடைந்த ரோட்டை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.