Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/இந்திய அரசுப்பணியாளருக்கான  செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

இந்திய அரசுப்பணியாளருக்கான  செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

இந்திய அரசுப்பணியாளருக்கான  செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

இந்திய அரசுப்பணியாளருக்கான  செஸ் போட்டிக்கு வீரர்கள் தேர்வு

ADDED : பிப் 12, 2024 04:39 AM


Google News
ராமநாதபுரம்: -இந்திய அரசுப்பணியாளர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள் தென் கோவாவில் நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்க மாநில அளவிலான வீரர்கள் தேர்வு நடக்கவுள்ளது.

செஸ் விளையாட்டுப்போட்டிகள் ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கம், சென்னையில் பிப்.14 காலை 8:00 மணிக்கு நடக்கவுள்ளது.

மாநிலத்தில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள் அகில இந்திய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கலாம்.செஸ் விளையாட்டு போட்டிகள் பிப்.20 முதல் 28 வரை மனோகர் பாரிக்கர் உள் விளையாட்டு அரங்கம், தென் கோவாவில் நடக்கவுள்ளது.

மாநில அளவில் ஆண்களில் 6 பேரும், பெண்களில் 6 பேரும் தேர்வு செய்யப்படுவார்கள்.

போட்டியில் பங்கேற்பவர்களுக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது.

தேர்வு நடக்கும் இடத்திற்கு பிப்.13 அன்று மாலை 5:00 மணிக்குள் தகுந்த ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us