Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ மே 16ல்   தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம்

மே 16ல்   தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம்

மே 16ல்   தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம்

மே 16ல்   தனியார் துறை  வேலைவாய்ப்பு முகாம்

ADDED : மே 14, 2025 12:33 AM


Google News
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மே16ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

10ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்த வேலைதேடும் இளைஞர்கள் தங்களது தகுதிக்கேற்ப தனியார்துறை நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் வாய்ப்பை பெறலாம்.

விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம், அசல் கல்விச்சான்று, ஆதார், ரேஷன் கார்டு, போட்டோ உடன் மே 16ல் காலை 10:00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பங்கேற்கலாம்.

இம்முகாமில் வேலை பெறுவதால் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தை கொண்டும் ரத்து ஆகாது. தனியார் துறை நிறுவனங்கள், வேலை தேடும் நபர்கள் கட்டணம் ஏதுமின்றி www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us