Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் திருப்பணி துவக்கம்

சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் திருப்பணி துவக்கம்

சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் திருப்பணி துவக்கம்

சாயல்குடி கைலாசநாதர் கோயிலில் திருப்பணி துவக்கம்

ADDED : அக் 02, 2025 04:21 AM


Google News
சாயல்குடி : சாயல்குடியில் பழமை வாய்ந்த கைலாசநாதர் சமேத மீனாம்பிகை கோயிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் துவங்கியுள்ளன.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிவன் கோயிலில் இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட கோயிலாகும். முற்றிலும் கடற்பாறை கற்களால் கட்டமைக்கப்பட்ட சிவன் கோயிலில் அர்த்தமண்டபம், மகா மண்டபம், பிரகாரச் சுற்று உள்ளிட்டவை உள்ளன.

ஆண்டுக்கு ஒருமுறை மகா சிவராத்திரி அன்று மூலவர் கைலாசநாதர் கருவறைக்கு அருகே உள்ள தடுப்புச் சுவரை ஒட்டி சின்மயா உலா எனப்படும் குறுகிய வழியின் வழியாக தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் பழமை மாறாமல் கோயிலின் அனைத்து பகுதிகளிலும் திருப்பணிகள் பக்தர்கள் மற்றும் உபயதாரர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us