/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை
தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை
தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை
தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை
ADDED : பிப் 12, 2024 04:51 AM
ராமநாதபுரம்: -தபால் அலுவலகங்களில் தங்கப் பத்திரம் விற்பனை இன்று முதல் பிப். 26 வரை நடக்கிறது.
ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளதாவது:
இந்திய அரசு தங்க பத்திர திட்டத்தினை ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இன்று முதல் (பிப்.12) ராமநாதபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை தபால் அலுவலகங்களிலும் கிராம் ரூ.6263க்கு தங்கபத்திரம் விற்கப்படுகிறது.
இத்திட்டத்தில் ஒருவர் ஒன்று முதல் 4000 கிராம் வரை முதலீடு செய்யலாம்.
அத்தொகைக்கு 2.5 சதவீதம் ஆண்டு வட்டி 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். எட்டு ஆண்டுகள் கழித்து அன்றைய 24 காரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வு தொகை வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள் ஆதார்அட்டை, பான் கார்டு, வங்கி சேமிப்பு கணக்குப்புத்தகத்தின் முதல் பக்கம் நகர் வேண்டும்.
கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம். விற்பனை பிரதிநிதியை 94431 39982 என்ற அலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.----------