ADDED : பிப் 29, 2024 10:24 PM
பெரியபட்டினம், - வண்ணாங்குண்டு அருகே பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் கோயிலில் சிவராத்திரி உற்ஸவ விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
மூலவர்கள் அழகு நாயகி அம்மன், அழகு சுந்தரேஸ்வரர் உள்ளிட்டபரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
மார்ச் 5ல் 508 விளக்கு பூஜை, மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ல் மாலை 6:00 மணிக்கு மேல் கோயில் முன் பூக்குழி வளர்த்த நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4:30 மணிக்கு நேர்த்திக்கடன் பக்தர்கள் பூக்குழி இறங்கும் உற்ஸவ விழா நடக்கிறது.


