ADDED : மே 15, 2025 04:09 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரத்தில் ஏழாவது சிறு பாசன கண்மாய்கள் கணக்கெடுப்பு மற்றும் இரண்டாவது நீர்நிலைகள் தொடர்பான பயிற்சி தாசில்தார் அமர்நாத் தலைமையில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது.
புள்ளியியல் அலுவலர் பத்மநாபன் கணக்கெடுப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஊழியர்களுக்கு எடுத்துரைத்தார்.
தொடர்ந்து கணக்கெடுப்பு தொடர்பாக ஊழியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடந்தன. ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட வருவாய்த்துறையினர் கலந்து கொண்டனர்.