ADDED : பிப் 25, 2024 12:52 AM
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாலமுருகன் 42. இவரது மனைவி விஜயகலா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். பாலமுருகன் மது போதையில் அடிக்கடி குடும்பத்தில் தகராறு செய்து வந்தார்.
இவரது மனைவி நேற்று சுவாமி தரிசனம் செய்ய வெளியூர் சென்றுள்ளார். வீட்டில் மனைவி இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நேற்று மாலை வீட்டில் அமர்ந்து மது அருந்தினார். அப்போது வீட்டுக்கு வந்த 17 வயது மகன் தந்தையை கண்டித்தார். இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. அங்கிருந்த மரக்கட்டையால் தந்தையை மகன் தாக்கினார். இதில் சம்பவ இடத்தில் பாலமுருகன் உயிரிழந்தார். ராமேஸ்வரம் துறைமுகம் போலீசார் மகனை கைது செய்தனர்.