ADDED : செப் 25, 2025 11:16 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் மெரா யுவா பாரத், நேரு யுவா கேந்திரா சார்பில் தொகுதி அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது.
பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.எஸ்.ஐ., சுபாஷ் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட இளையோர் அலுவலர் சம்யாக் மேஷ்ராம் சான்றிதழ் வழங்கினார்.ஆண்கள் பிரிவில் வாலிபால், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், சிலம்பம், பெண்கள் பிரிவில் டக் ஆப் வார், 200 ஓட்டப்பந்தயம், சிலம்பம் போட்டிகள் நடந்தன.