ADDED : செப் 23, 2025 11:39 PM

கீழக்கரை; கீழக்கரை செய்யது ஹமிதா கலை அறிவியல் கல்லுாரியில் மாநில அளவிலான கலை மற்றும் கலாசார விழா நடந்தது. முதல்வர் ராஜ சேகர் தலைமை வகித்தார். தமிழ் துறை பேராசிரியர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். நுண்ணுயிரியல் துறை தலைவர் சோபனா விழாவை ஒருங்கிணைத்தார்.
பத்திற்கும் மேற்பட்ட கல்லுாரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தி னர்.
இதில் குழு நடனம், தனி நடனம், தனிப்பாடல், பேஷன் ஷோ, மணமகள் அலங்காரம், பென்சில் ஓவியம், மெஹந்தி, கழிவு பொருட்களிலிருந்து கலைநய பொருட்கள் தயாரித்தல் மற்றும் காய் கறிகளை கொண்டு அலங்காரம் செய்தல் போன்ற தலைப்புகளில் போட்டிகள் நடந்தன.
உச்சிப்புளி புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., பெண்கள் கலை அறிவியல் கல்லுாரி முதலிடத்தையும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி இரண்டாம் இடத்தையும், கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.
ஏற்பாடுகளை துறை தலைவர்கள் மதினா, சசிகுமார், நுாகர் பால்ராஜ், விளையாட்டு இயக்குனர் தவசலிங்கம், பேராசிரியர்கள் மலர், பிரபாவதி, செல்வகுமார், ஜேசுதுரை, முனியசத்தியா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.