/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால் பழசு புதுசு ஆகுது ; விருந்தினர் மாளிகை கட்டடம், ரோடுகள் சீரமைப்புராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால் பழசு புதுசு ஆகுது ; விருந்தினர் மாளிகை கட்டடம், ரோடுகள் சீரமைப்பு
ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால் பழசு புதுசு ஆகுது ; விருந்தினர் மாளிகை கட்டடம், ரோடுகள் சீரமைப்பு
ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால் பழசு புதுசு ஆகுது ; விருந்தினர் மாளிகை கட்டடம், ரோடுகள் சீரமைப்பு
ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகையால் பழசு புதுசு ஆகுது ; விருந்தினர் மாளிகை கட்டடம், ரோடுகள் சீரமைப்பு
ADDED : செப் 25, 2025 03:15 AM

ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலின் ராமநாதபுரத்திற்கு செப்.,29, 30 ல் வருகை தர உள்ளதால் மாவட்டத்தில் அரசு நலத்திட்டப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. குறிப்பாக முதல்வரை வரவேற்கும் விதமாக அரசு விருந்தினர் மாளிகை முழுமையாக புதுப்பிக்கப்படுகிறது. நகர் பகுதியில் மதுரை- ராமநாதபுரம் ரோடு சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று அரசின் திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு செய்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 2024 லோக்சபா தேர்தல் பிரசார கூட்டத்திற்கும், மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ராமேஸ்வரம் வந்தார். கடந்த ஆண்டு 2024 அக்.,30 தேவர் குருபூஜை விழாவிற்கு வந்தார். இந்நிலையில் வரும் செப்., 29, 30 இரு தினங்கள் ராமநாதபுரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார்.
அப்போது ஒரு சில இடங்களை நேரடியாக பார்வையிட்டு கள ஆய்வு செய்கிறார். அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் பங்கேற்கும் ரோடு ேஷா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார்.
இதற்காக பேராவூர் அருகே புல்லங்குடியில் காலியிடத்தை சுத்தம் செய்து மேடை அமைக்கும் பணிகள் நடக்கிறது.
மதுரை- ராமநாதபுரம் ரோடு அச்சுந்தன்வயல் முதல் கலெக்டர் அலுவலகம் உள்ள பட்டணம் காத்தான் ஊராட்சி வரை புதிதாக ரோட்டை சீரமைத்து தடுப்புகளில் வர்ணம், வேகத்தடைகளில் வெள்ளை பெயின்ட் பூசும் பணி நடக்கிறது. குறிப்பாக செப்.,29ல் முதல்வர் தங்க உள்ள அரசு விருந்தினர் மாளிகை தரைத்தளம் துவங்கி மேல்தளம், தோட்டப்பகுதிகள் அனைத்தும் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் சேதமடைந்த ரோடுகளும் புதிதாக சீரமைக்கும் பணிகள் நடக்கிறது.
முன்னதாக நேற்று மதியம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் எஸ்.பி., சந்தீஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்ற முதல்வர் வரவேற்பு, நலத்திட்ட விழா முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.