/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ தரம் உயர்த்தப்பட்ட எஸ்.பி.பட்டினம் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்ட எஸ்.பி.பட்டினம் ஸ்டேஷன்
தரம் உயர்த்தப்பட்ட எஸ்.பி.பட்டினம் ஸ்டேஷன்
தரம் உயர்த்தப்பட்ட எஸ்.பி.பட்டினம் ஸ்டேஷன்
தரம் உயர்த்தப்பட்ட எஸ்.பி.பட்டினம் ஸ்டேஷன்
ADDED : டிச 01, 2025 07:03 AM

திருவாடானை: திருவாடானை சப்-டிவிசனில் எஸ்.ஐ. அந்தஸ்தில் இருந்த எஸ்.பி. பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தபட்டு, இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்றுள்ளார்.
தமிழக சட்டசபையில் போலீஸ் மானிய விவாதத்தின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், அன்றாட அவசர நிலையை கையாளும் வகையில் 280 இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனாக தரம் உயர்த்தபடும் என அறிவிக்கபட்டது. திருவாடானை சப்-டிவிசனில் திருவாடானை, தொண்டி, திருப்பாலைக்குடி, ஆர்.எஸ். மங்கலம், எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன.
இதில் எஸ்.பி.பட்டினத்தை தவிர மற்ற போலீஸ் ஸ்டேஷன்கள் இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் உள்ளது. சட்டசபையில் அறிவிக்கபட்டதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் அந்தஸ்தில் எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் தரம் உயர்த்தப்பட்டது.
நேற்று இன்ஸ்பெக்டராக சுரேஷ் பொறுப்பேற்றார். ஓரியூர், பாசிபட்டினம், சோழகன்பேட்டை, சிறுகம்பையூர், வெள்ளையபுரம், புல்லக்கடம்பன் உள்ளிட்ட 72 கிராமங்கள் எஸ்.பி.பட்டினம் போலீஸ் ஸ்டேஷன் கட்டுப்பாட்டில் உள்ளது.


