/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/மினி வேன் மோதிய விபத்தில் கணவர் கண்முன் மனைவி பலிமினி வேன் மோதிய விபத்தில் கணவர் கண்முன் மனைவி பலி
மினி வேன் மோதிய விபத்தில் கணவர் கண்முன் மனைவி பலி
மினி வேன் மோதிய விபத்தில் கணவர் கண்முன் மனைவி பலி
மினி வேன் மோதிய விபத்தில் கணவர் கண்முன் மனைவி பலி
ADDED : ஜன 28, 2024 04:58 AM
சாயல்குடி ;சாயல்குடி அருகே டூவீலரில் கணவன்-மனைவி மீது மினி சரக்கு வேன் மோதியதில் கணவன் கண்முன் மனைவி பலியானார்.
பஸ்ஸ்டாப் நிழற்குடையில் மோதியதில் 5 பயணிகளும் காயமடைந்தனர்.
சாயல்குடி அருகே கே.வேப்பங்குளத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 62. இவரது மனைவி கண்ணம்மாள் 58. இருவரும் டூவீலரில் கே.வேப்பங்குளம் அருகே எஸ்.எம். இலந்தைகுளத்தில் உறவினர் துக்க நிகழ்ச்சிக்கு சென்றவிட்டு மீண்டும் ஊர் திரும்பினர்.
மாலை 4:00 மணிக்கு பெருநாழி, எஸ்.எம்.இலந்தைகுளம் மும்முனை சாலை சந்திப்பில் பெருநாழியில் இருந்து விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சாயல்குடி நோக்கி மினி வேன் வந்து கொண்டிருந்தது.
அந்த வேன் ராமச்சந்திரன் டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்தில் கணவர் கண்முன் மனைவி கண்ணம்மாள் பலியானார்.
காயமடைந்த ராமச்சந்திரன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மோதிய வேகத்தில் அருகே இருந்த பஸ் ஸ்டாப்பில் பஸ்சிற்காக காத்திருந்த 5 பயணிகள் மீது வேன் மோதியதில் பயணிகள் நிழற்குடை விழுந்தது. பயணிகள் காயமடைந்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.