/உள்ளூர் செய்திகள்/ராணிப்பேட்டை/ காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம் காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
காலாவதி கேக் சாப்பிட்ட பள்ளி மாணவன் மரணம்
ADDED : செப் 24, 2025 03:12 AM

வேலுார்:ராணிப்பேட்டை மாவட்டம், தாமரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்; இவரது மகன் மிதுன், 7; காவனுார் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்தார்.
நேற்று, பள்ளிக்கு சென்ற சிறுவன், மதிய உணவு இடைவேளையின் போது வீட்டிலிருந்து கொண்டு சென்ற கேக் மற்றும் மதிய உணவு சாப்பிட்டார். மீண்டும் வகுப்பறைக்கு வந்தவர் முகம் வீங்கிய நிலையில், திடீரென மயங்கி விழுந்தார்.
மாணவனை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோருக்கு தகவல் கூறி, ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மிதுன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். திமிரி போலீசார் மாணவன் உடலை கைப்பற்றினர்.
சிறுவனின் பெற்றோர் செப்., 13ம் தேதி ஆற்காடில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் வாங்கியுள்ளனர். அதை மிதுனுக்கும், அதே பள்ளியில் படிக்கும் அவனது சகோதரிக்கும் கொடுத்து அனுப்பியுள்ளனர்.
பள்ளி வேனில் வரும் போதே, மிதுன் சகோதரி கேக்கை சாப்பிட முயன்ற போது, அது காலாவதியாகி, துர்நாற்றம் வீசியதால் துாக்கி வீசியுள்ளார். ஆனால், மிதுன் பள்ளி இடைவேளையின் போது, கெட்டுப்போன கேக்கை சாப்பிட்டு உயிரிழந்துள்ளார்.
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சம்பந்தப்பட்ட பேக்கரியின் கேக் மற்றும் நீரின் தரத்தை உறுதி செய்ய, மாதிரி சேகரித்துள்ளனர்.