/உள்ளூர் செய்திகள்/சேலம்/ வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு
வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு
வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு
வீட்டில் மூதாட்டி சடலம் அழுகிய நிலையில் மீட்பு
ADDED : ஜூலை 04, 2024 07:27 AM
சேலம் : சேலம் மாவட்டம் வனவாசியை சேர்தவர் ராஜலட்சுமி, 85. சேலம், தாதகாபட்டி அம்பாள் ஏரி சாலையில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். சில நாட்களாக வீட்டில் இருந்து அவர் வெளியே வரவில்லை. இந்நிலையில் துர்நாற்றம் வீச, மக்கள் தக-வல்படி, அன்னதானப்பட்டி போலீசார் வந்து பார்த்தனர்.
கதவு உட்புறம் தாழிடப்பட்டிருந்ததால் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது ராஜலட்சுமி இறந்து கிடந்ததோடு, உடல் அழுகிய நிலையில் இருந்தது. உடலை கைப்பற்றிய போலீசார், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தாரா, வேறு கார-ணமா என விசாரிக்கின்றனர்.